அநுரவின் புலனாய்வு பிரிவின் முக்கிய நியமனத்தால் கலக்கத்தில் பலர்!
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில், புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றிய சானி அபேசேகரவிற்கு சிறப்பு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் அநுர அரசாங்கத்தில் ஒருவருட கால பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக புலனாய்வு செய்தியாளர் எம். எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதுமே நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி நிசாந்த டி சில்வா மீண்டும் நாட்டிற்கு திரும்பவுள்ளதாகவும் புலனாய்வு செய்தியாளர் எம். எம். நிலாம்டீன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிசாந்த டி சில்வாவிற்கும் அநுர அரசாங்கத்ததால் ஒருவருட கால பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஊடகவியலாளர் தராகி சிவராமின் மரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஏனைய முக்கிய வழக்குகள் தொடர்பில் சானி அபேசேகரவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகபுலனாய்வு செய்தியாளர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், புலனாய்வு அதிகாரிகளின் நியமனம் தொடர்பிலும் அதன் பின்னணி குறித்தும் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |