விவசாயிகளுக்கு அச்சம் வேண்டாம் : அமைச்சரவை அளித்த அனுமதி
விவசாய மேம்பாட்டுத் துறையின் விவசாய சேவைகள் குழு, இந்த ஆண்டு பெரும் போகத்திற்கு தேவையான 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் 550,000 ஹெக்டேர் நெல் நிலம் சாகுபடி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், தற்போது அதன் அளவு சுமார் 450,000 - 500,000 ஹெக்டேராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
75,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவை
இதற்கு சுமார் 75,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது, நாட்டின் கையிருப்பில் உள்ள 48,297.87 மெட்ரிக் தொன் உரம், விவசாய சேவைகள் குழுக்களால் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

2026 ஆம் ஆண்டு பெரும் போகத்திற்கு உரத்தை ஒரு நிலையான விலையில் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, கமநல சேவை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா உரத்தை ரூ. 10,200 என்ற விலையில் வழங்க ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விவசாய அமைச்சரின் முன்மொழிவிற்கு கிடைத்தது அனுமதி
அதன்படி, 2026 ஆம் ஆண்டு பெரும் போகத்திற்குத் தேவையான 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை விவசாய சேவைக் குழுக்கள் மூலம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |