மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பொங்கி எழுந்த அர்ச்சுனா : முற்றிய வாக்குவாதம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (26) இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சகாதேவன் அர்ச்சுனாவை பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள் என தெரிவித்துள்ளார்.
அதற்கு வாயை மூடுங்கள் என அர்ச்சுனா ஆங்கிலத்தில் தெரிவித்த நிலையில் இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் (Shut up) என்று எல்லாம் கூற முடியாது இங்கே அதிகாரிகள் தான் உள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கதைக்கும் போது, கதைப்பதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்களா என்றுவிட்டு தம்பிராசாவை பார்த்து "can you shut up" (உங்களது வாயை மூட முடியுமா?) என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தம்பிராசாவிற்கும் இராமநாதன் அர்ச்சுனாவிற்கும் இடையே வாக்குவாதம் தொடர்ச்சியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |