நிதி மோசடி விவகாரம்; சிக்கினார் உப அதிபர் - ஆர்ஜெண்டினா வரலாற்றில் பதிவான சம்பவம்
ஆர்ஜென்டினாவினுடைய உப அதிபர் நிதி மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஜென்டினாவின் உப அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸே(Cristina Fernandez) இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குறித்த நிதி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிதி மோசடி
கிறிஸ்டினா பெர்னாண்டஸ் இரண்டு முறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளதுடன், அவரது கணவரும் ஆர்ஜென்டினாவின் முன்னாள் அதிபர் ஆவார்.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து, அவருக்கு ஆயுள் முழுவதும் அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனத்திலும் பணியாற்ற முடியாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டிக்கப்படும் முதல் அதிபர்
ஆர்ஜென்டினா வரலாற்றில் உப அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும் பொழுது குற்றவாளியாக தண்டிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
தண்டனை விதிக்கப்படட முதல் அதிபர் நிதி மோசடி இதேவேளை அதிபர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு அமைய அவரது சிறைத்தண்டனை நீக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
