பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் கைதான ஆசிரியை; நீதிமன்றின் அறிவிப்பு
மாணவன் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஹொரணை நீதிமன்றம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.
ஹொரணை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் 15 வயது பாடசாலை மாணவனை முத்தமிட்டு பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு ஹொரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சாட்சிகளுக்கு எவ்வித அழுத்தமும் வழங்கப்பட கூடாது எனவும் நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை ஹொரணை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்பிக்கும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஆவார்.
