உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு
கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவிற்கு (Upul Tharanga) மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் உபுல் தரங்க வெளிநாடு சென்ற காரணத்தினால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
அவர் வெளிநாட்டில் உள்ளதால், நாடு திரும்பிய பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாவதாக சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் போட்டித் தொடர் மேட்ச் பிக்சிங் வழக்கில் இன்று (8) நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காகவே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உபுல் தரங்க தற்சமயம் அமெரிக்காவில் பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |