சென்னைக்கு செல்லவிருந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Bandaranaike International Airport
Chennai
Gold smuggling
By Sumithiran
சென்னைக்கு செல்ல முயன்ற ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடலில் தங்கத்தை மறைத்து வைத்து
இவர்கள் தமது உடலில் 5.6 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முயன்ற நிலையில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் சென்னை நோக்கிச் செல்லவிருந்த விமானத்தில் பயணிக்கவிருந்த போது, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளனா்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி