அதிகளவான ஹெரோயின் வைத்திருந்த 16 வயதுச் சிறுமி! யாழில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணம் பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 55 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 16 வயது சிறுமியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் (22) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சிறுமியிடமிருந்து 55 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து சிறுமி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமியிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி