நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் குற்றப் புலனாய்வு பிரிவால் கைது
நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கைது நடவடிக்கை இன்று (06.11.2025) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் நேற்றையதினம் சாரதிகள் இருவர் கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ச்சியான நடவடிக்கை
அத்துடன் இதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்னிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பெயரில், நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுத்தியிருந்தனர்.
இன்னிலையில் குறித்த சந்தேகநபர்களை ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |