இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின்னர் இந்த நிலைமையை காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு (2024) இலங்கையின் பொருளாதாரம் 1.9 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாகவும் 2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் 2.5 வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடினமான சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தும் வகையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டுக்குரியது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |