அஸ்வெசும கொடுப்பனவை வழங்குமாறு கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்
அஸ்வெசும கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு, உடையார்கட்டு, குரவில், தேராவில் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது “ஏழைகள் வாழ்வில் ஏழனம் செய்யாமல் எங்களை உள்வாங்கு, வேண்டும் வேண்டும் அஸ்வெசும, அரசே அஸ்வெசும திட்டத்தில் அனைவரையும் உள்வாங்கு, அதிபரே தகுதியான எங்களையும் உள்வாங்கு '' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.
மனு கையளிப்பு
இதனைத் தொடர்ந்து கிராம மட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் சிலர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் சென்று அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களிடம் மக்களின் கோரிக்கை அடங்கிய மனுவினை கையளித்தனர்.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடமும் மனுவினைக் கையளித்துள்ளனர்.
