டக்ளஸ் மீது தாக்குதல் - இருவருக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை

Kalutara Douglas Devananda Supreme Court of Sri Lanka
By Jaso Oct 26, 2022 05:15 PM GMT
Report

1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, இன்று (26) தீர்ப்பளித்தார்.

குறித்த இருவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்தே, அவர்களுக்கு எதிராக இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை சிறைச்சாலையில் வைத்து தாக்குதல் 

டக்ளஸ் மீது தாக்குதல் - இருவருக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை | Attack On Douglas 2 Men Jailed

அத்துடன் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 40 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பிரதிவாதிகள் இருவரும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தலா 1 இலட்சம் வீதம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

களுத்துறைச் சிறைச்சாலையில் 1998 ஆம் ஆண்டு தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த நிலையில் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா  கைதிகளை பார்வையிட்டு கலந்துரையாடச் சென்றிருந்த சமயமே கைதிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

டக்ளஸ் மீது தாக்குதல் - இருவருக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை | Attack On Douglas 2 Men Jailed

1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் தேவானந்தாவை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையிலேயே, மேற்குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி