யாழில் ஆசிரியர் மீது தாக்குதல் - ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

Jaffna Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Sumithiran Nov 23, 2022 01:14 AM GMT
Report

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாண தலைமை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒஸ்மானியா கல்லூரிக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை ஒருவர் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரான து.கௌரிபாலன் என்பவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் ஆசிரியர் காயங்களுக்கு உள்ளான நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு

யாழில் ஆசிரியர் மீது தாக்குதல் - ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் | Attack On Teacher In Jaffna Threat To Journalists

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்த இரு ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடும் நோக்குடன் கல்லூரிக்கு நேரில் சென்று , சம்பவம் தொடர்பில் கேட்டறிய முற்பட்ட வேளை ,பழைய மாணவர்கள் ,பாடசாலை நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் , ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து , அவர்களின் ஒளிப்பட கருவிகளை பறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

தமது கல்லூரி தொடர்பில் எந்த செய்தியும் வெளிவரக் கூடாது, என அச்சுறுத்தி ஊடகவியலாளர்களை மடக்கி பாடசாலை வளாகத்தினுள் தடுத்து வைத்திருந்தனர். சம்பவம் தொடர்பில் அறிந்து பாடசாலைக்கு விரைந்த காவல்துறையினர் ஊடகவியலாளர்களை அவர்களிடம் இருந்து விடுவித்தனர்.

காவல் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

யாழில் ஆசிரியர் மீது தாக்குதல் - ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் | Attack On Teacher In Jaffna Threat To Journalists

இந்நிலையில் , தம்மை அச்சறுத்தி தமது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்திய மாணவனின் தந்தை தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்தும் நபர்கள் சிலர் குறித்த சம்பவத்தை இன ரீதியான சம்பவமாக திரிவுபடுத்தி வருவதாகவும் , இதற்கு முன்னரும் கல்லூரி சார் விடயங்களில் அத்துமீறி தலையிட்டு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் எனவும் அவ்வாறான பின்னணியில் தான் இன்றைய தினம் மாணவனின் தந்தை ஒருவர் பாடசாலைக்குள் எந்தவித தயக்கமும் இன்றி அத்துமீறி நுழைந்து ஆசிரியர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார் எனவும், அதன் பின்னரும் குறித்த தந்தையை காப்பாற்றும் நோக்குடனேயே சிலர் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026