பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அபார வெற்றி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான 3வது ரி20 போட்டி ஹோபார்ட்(Hobart) மைதானத்தில் இன்று (18) நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி
முதலில் துடுப்பெடுத்ததாடிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 117 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ஓட்டங்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து, ஹசிபுல்லா கான் 24 ஓட்டங்களும், ஷாகின் அஃப்ரிடி 16 ஓட்டகளும் எடுத்தனர்.
அவுஸ்திரேலியா தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆடம் ஸாம்பா மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அவுஸ்திரேலியா அணி
118 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 11.2 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அந்த அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோஷ் இங்லிஷ் 27 ஓட்டங்களும், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அஃப்ரிடி, ஜஹகன்தாத் கான் மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை அவுஸ்திரேலியா அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகனாகவும், ஸ்பென்சர் ஜான்சன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |