இலங்கைக்கு டொலர்களை வழங்குகிறது அவுஸ்திரேலிய அரசாங்கம்..! வெளியானது அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Australia
By Kanna
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைக்கு இந்த உதவிகளை வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்த உதவித் தொகை 75 மில்லியன்
அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை, இந்த மனிதாபிமான உதவியின் மூலம் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கைக்கு அவுஸ்திரேலியா வழங்கும் உதவித் தொகை 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 10 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி