அயோத்தி ராமர் கோவில்: நாளை நிகழவுள்ள அபூர்வ நிகழ்வு!
பிரம்மாண்டமான அயோத்தி ராமர் கோயிலில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது.
குறித்த நிகழ்வானது, நாளை (புதன்கிழமை) சரியாக பகல் 12.16 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த ஜனவரி 22ம் திகதி பெரும் எதிர்பார்பிற்கு மத்தியில் ஸ்ரீபால ராமரின் சிலை அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தினமும் செய்து வரும் நிலையில், தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9வது நாளான நாளை 17ம் திகதி ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோற்சவம் கோலாகலமாக நடக்கிறது.
அயோத்தி ராமர் கோயில்
இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபால ராமரின் சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.
பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
அபூர்வ நிகழ்வு
மேலும் இந்த அபூர்வ நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும் எனவும், இதனை காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி.(LED) திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராம நவமி விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |