யாழில் ஆறு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
Jaffna
Sri Lanka
Death
By pavan
யாழ்ப்பாணத்தில் மூச்சுத் திணறல் காரணமாக ஆறு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
திருநெல்வேலி, கலாசாலை வீதி பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
ஆறு மாத குழந்தை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 22ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில் பெற்றோர் இரவு 12 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலைவேளை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
மரண விசாரணை
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி