நீதிமன்றக் கொலையில் துப்பாக்கிதாரியின் திட்டங்கள் : அம்பலமாகும் இரகசியங்கள்
பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva), ஐந்தாம் இலக்க நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என்பது துப்பாக்கிதாரிக்கு எவ்வாறு தெரிரிந்திருக்க கூடும் என்பதில் பாரிய சந்தேகம் எழுவதாக லங்காசிறியின் ஊடகவியலாளர் டில்சான் வின்சன் (Dilshan Vinsan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒன்பதாம் இலக்க நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, அங்கு நீதிபதிகள் இல்லாத காரணத்தினால்தான் ஐந்தாம் இலக்க நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், ஐந்தாம் இலக்க நீதிமன்றத்திற்குத்தான் கணேமுல்ல சஞ்சீவ, அழைத்து வரப்படுவார் என்பது தொடர்பில் துப்பாக்கிதாரிக்கு தெரிந்திருக்கின்றது என்றால் அவருக்கு யாருடைய ஆதரவோ இருந்துள்ள நிலையில், இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட சம்பவமாக இருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலும், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி தொடர்பிலும் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
