பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் பேகம் கலீடா ஷியா (Begum Khaleda Zia) காலமானார்.
கலீதா ஜியா நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டு 80 வயதில் காலமானார்.
உடல் நலக் குறைவினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (30.12.2025) காலமானதாக, பங்களாதேஷ் தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
முதல் பெண் பிரதமர்
20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலில் தனது கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜியா, 1991 ஆம் ஆண்டு பங்களாதேஷின் முதல் பெண் பெண் பிரதமராகப் பதவியேற்றார்.

2001ஆம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர் 2006 ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜியா, சிறுநீரக பாதிப்பு, இதய நோய் மற்றும் நிமோனியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை “மிகவும் மோசமான நிலையில்” இருப்பதாக வைத்தியர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர். வயதும் ஒட்டுமொத்த உடல்நலக் குறைவும் காரணமாக ஒரே நேரத்தில் பல சிகிச்சைகள் வழங்க முடியாது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
ஆட்சியிலிருந்து அகற்றிய புரட்சி
உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், பிப்ரவரியில் எதிர்பார்க்கப்பட்ட பொதுத் தேர்தலில் ஜியா போட்டியிடுவார் என அவரது கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.

இது, அவரது அரசியல் போட்டியாளரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆட்சியிலிருந்து அகற்றிய புரட்சிக்குப் பின்னர் நடைபெறவிருந்த முதல் தேர்தலாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கத்திற்கு, கலீடா ஷியா ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |