ஆதரவு அலையை வெளிப்படுத்த பிள்ளையான் தரப்பு செய்த வேலை (படங்கள்)
இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று மாலை 3 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள சிறிமுருகன் மைதானத்தில் இடம்பெற்றது.
வட்டாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய்
இதன்போது, தங்களது ஆதரவு அலையை வெளிக்காட்டவேண்டும் என்பதற்காக வெளி பிரதேசங்களில் இருந்து பேருந்துகள் மூலம் மக்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வட்டாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும் விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணமும் வழங்குவதாக தெரிவித்து மக்களை அழைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தூய்மையான அரசியல் செய்கின்றோம் என்றுமேடைகளில் வீரவசனம் பேசும் இவர்கள் பணத்தின் மூலம் எதுவும் செய்துவிடலாம் என நினைக்கின்றனர்.
கடந்த காலங்களில் இவர்களது வசம் இருந்த பிரதேச சபை வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டும் தன்னிச்சையாக செயற்பட்ட வரலாறும் இருக்கின்றது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
