உலகளவில் முக்கிய சக்தியாக உருவெடுத்த பாரதீய ஜனதா கட்சி
BJP
India
By Vanan
இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி, உலக அளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சஞ்சிகை இதனைத் தெரிவித்துள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி
குறித்த சஞ்சிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சியாக, பாரதீய ஜனதா கட்சி விளங்குகிறது.
2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி, அடுத்து 2024-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை திரும்ப பெறும் முனைப்பில் உள்ளது.
முன்னணி பொருளாதார சக்தி படைத்த நாடாக இந்தியா வெளிப்பட்டு வரும் நிலையில், வளர்ந்து வரும் சீனாவின் ஆற்றலை சமப்படுத்தும் வகையிலான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் உதவியின்றி செயற்படுவது பலன் தராது” - என்றுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்