மின்சார கட்டண அதிகரிப்பு: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்
                                    
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Ceylon Electricity Board
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத்திற்கு எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
லக்சபான மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சார ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் நாடு முழுவதும் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்படும் எனவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு
அத்தோடு, புதிய மின்சார கட்டணத்திற்கு எதிராக செயற்படாத எவராவது இருந்தால் அவர் குருடனாகவோ அல்லது ஊமையாகவோ மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்