பிழையான நோக்கத்துடன் செயற்படாதீர்கள்! சாணக்கியனை சாடிய பிமல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியிடும் பிழையான நோக்கத்தில் கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை (R.Shanakiyan) நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போது தொடர்ந்து பேசிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, “நான் வினயமாக கேட்டுக் கொள்கிறேன், இனவாத அரசியல் செய்துகொள்ளுங்கள். ஆனால் அதை நாடாளுமன்றில் பறைசாற்ற வேண்டாம். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.
அதாவது மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி தொடர்பில் சாணக்கியன் கேட்டிருந்த கேள்விக்கு 06 மாதங்களின் பிறகு பிரதியமைச்சர் அளித்த பதிலுக்கு பின்னர் சாணக்கியன் உரையாற்றிய போது, “மட்டக்களப்பில் அநேக வீதிகள் RDAயின் கீழ் இருக்கிறது. சில வீதிகளே பிரதேச சபையின் அதிகாரத்தில் இருக்கிறது.
வீதிகளை அபிவிருத்தி செய்தல்
RDAயின் கீழ் இருக்கும் வீதிகளை அபிவிருத்தி செய்ய மத்திய அரசே நிதி வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் எமக்கு நிதி கோர முடியாது.
ஆதலால் RDAக்கு மாகாண சபையின் நிதி வழங்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதியமைச்சர், சாணக்கியன் எம்.பி, பாதைகளை அபிவிருத்தி செய்ய மாகாண சபைக்கு பணமில்லை என்பது உண்மை.
ஆனால் அதற்கான தொழில்நுட்ப வசதிகள் இருக்கிறது. ஆதலால் மாகாண சபைக்கு ஏன் நிதி வழங்க முடியாது. எல்லா அமைச்சுக்களும் மாகாண சபை முறைமையை வலுவற்றதாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்த கருத்துக்கே அமைச்சர் பிமல் காரசாரமாக பேசியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
