ஐரோப்பிய நாடொன்றில் குறைவடைந்த பிறப்பு வீதம்
ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ளளன.
இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2022இல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023இல் இது 6.4 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து குடியேறுபவர்கள்
கடந்த ஆண்டு 379,000 குழந்தைகள் பிறந்துள்ளதுடன் இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட சுமார் 14 ஆயிரம் குறைவாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1ஆம் திகதி நிலவரப்படி நாட்டில் 5.80 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7000 பேர் குறைவாக உள்ளது.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த மக்கள் தொகை
அதன்படி அங்கு குடியேறியுள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 53 இலட்சமாக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்கள் 9 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மக்கள் தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உதவியாக இருப்பதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |