பிரித்தானிய அரசாங்கத்தில் திடீர் பதவி மாற்றம்
Boris Johnson
news
uk
By Vanan
பிரித்தானிய அரசாங்கத்தில் இன்று(08) திடீர் மறுசீரமைப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மத்தியில் தனது தலைமைத்துவத்திற்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) எடுத்த இந்தப் புதிய நகர்வில், இதுவரை கட்சியின் கொறடாவாக இருந்த மார்க் ஸ்பென்சர் கட்சியின் அவைத்தலைவர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், இதுவரை அவைத்தலைவர் பொறுப்பில் இருந்த ஜேக்கப் ரீஸ் - மோக், பிரெக்ஸிற் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோல் இதுவரை பிரெக்ஸிற் அமைச்சராக இருந்த கிறிஸ் ஹீதன்-ஹரிஸ் ( Chris Heaton-Harris ) புதிய தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
