யாழில் வாயிலிருந்து நுரைதள்ளி உயிரிழந்த இளைஞன்
Sri Lanka Police
Jaffna
Death
Drugs
By Thulsi
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார்.
மேலதிக விசாரணை
சிறிது காலம் திருந்தி வாழ்ந்த அவர் நேற்றுமுன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து ஹெரோயினை உள்ளெடுத்தார்.
இதையடுத்து வாயிலிருந்து நுரை தள்ளிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்குக் காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு கிழக்கை பிரித்த நாள்… ராஜபக்சக்களை விஞ்சியவர்களா ஜேவிபி
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்