பாணின் விலையில் நாளையதினம் ஏற்படவுள்ள மாற்றம்
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சற்று குறைந்த வண்ணம் உள்ள நிலையில் ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி நாளைமுதல் உணவகங்களில் பத்துவீத விலைகுறைப்பை மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை
அதேபோன்று பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை நாளை (31) குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன, இன்று (30) தெரிவித்தார்.
ஊடகங்களில் வெளியாகும் விலைக்கு பேக்கரிகளுக்கு கோதுமை மா கிடைப்பதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், 320 ரூபாயாக இருந்த ஒரு கிலோ மா தற்போது 298 ரூபாயாகக் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு முந்தைய நிலைப்பாடு
இதேவேளை கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அmண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.