பிரிட்டன் அதிரடி - ரஷ்யா மீது மேலும் பல தடைகள் விதிப்பு
russia
uk
sanction
ukraine war
By Sumithiran
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த கோர யுத்தத்தால் பெருமளவில் உயிர்ச்சேதம், உடமைச்சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு தமது உயிரை கையில் பிடித்தபடி பாதுகாப்பான நாடுகளுக்கு இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பல தடைகளை பிரிட்டன் அரசாங்கம் விதித்துள்ளது. அதில், ரஷ்யாவை சேர்ந்த மேலும் 65 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே ரஷ்ய அரசாங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், பணக்கார தொழிலதிபர்கள் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி