ஹோர்முஸ் நீரிணையை நோக்கி கப்பல்களை நகர்த்தும் பிரித்தானியா! ட்ரம்பின் அடுத்த திட்டம்
பிரித்தானியாவும் அதன் சகாக்களும் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் மறைத்து வைக்கப்பட்டுள்ள Minesweepersகளை அகற்றும் பணியில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைக்கான கப்பல்களை பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி "Minesweepersகளை அகற்றுவதற்கான நிலைமைகளை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக" அமெரிக்க இராணுவத்தின் சென்ட்காம் நேற்று தெரிவித்தது.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் புதைத்துள்ள Minesweepersகளின் சரியான இருப்பிடத்தைக் கண்டறிய முடியாததால், அவற்றை அகற்ற இயலவில்லை என அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாக, கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்தோடு, "தனக்குத் தெரிந்தவரை, பிரித்தானியாவும் மேலும் சில நாடுகளும் Minesweepersகளை அகற்றும் கப்பல்களை அனுப்பி வருகின்றன," என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |