பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான விமான சேவையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது 120 குறுகிய தூர விமானங்களை ரத்துச் செய்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிக்கை ஒன்றின் ஊடாக இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவிற்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 28 உள்ளூர் குறுகிய தூர விமானங்களையும், ஜெனீவா மற்றும் லியோனுக்கு மூன்று சுற்று பயணங்கள் உட்பட 94 வெளியூர் குறுகிய தூர விமானங்களையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ரத்துச் செய்துள்ளது.
விமான சேவை ரத்தானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், இது குறித்து தமது பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட விமானச் சேவையை முன்னரே அட்டவணையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
