எல்லை மீறிய பிரிட்டன் போர் விமானங்கள் - தடுத்து நிறுத்திய ரஷ்யா
United Kingdom
Russia
By Pakirathan
ரஷ்ய எல்லைக்குள் பிரித்தானிய விமானங்கள் ஊடுருவியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் பிரித்தானிய தரப்பு, வான்பரப்பில் வழமையாக நடக்கும் நிகழ்வு இது என தெரிவித்துள்ளது.
ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மேற்கத்திய நாடுகள் இருக்கின்றன.
அந்த நாடுகளினால் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் பெருமளவில் வழங்கப்பட்டு வருகின்றன.
விமானங்கள் ஊடுருவல்
இந்த நிலையில், கருங்கடல் பகுதியில் பறந்த பிரித்தானியாவின் இரண்டு போர் விமானங்களை ரஷ்ய விமானங்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரஷ்யா எல்லைக்குள் பிரித்தானிய விமானங்கள் வந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கு பிரித்தானியா, வான்பரப்புக்களில் இது வழக்கமாக நடக்கும் நிகழ்வு எனக் கூறியுள்ளது.
