தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி - சி.வி.விக்கினேஸ்வரன்

Jaffna Anura Kumara Dissanayaka Parliament Election 2024
By Thulsi Nov 24, 2024 03:59 AM GMT
Report

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த் தேசியமும் அழியவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் (C.V.Wigneswaran) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ்த்தேசிய சிந்தனையை வைத்து வியாபாரம் நடத்தியவர்கள் தேர்தலில் காணாமல்போயிருக்கிறார்கள் என சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்

ஊடகம் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புது தும்புத்தடி எதையும் கூட்டாது : அநுரவை கடுமையாக விமர்சித்த சுமோ

புது தும்புத்தடி எதையும் கூட்டாது : அநுரவை கடுமையாக விமர்சித்த சுமோ

தமிழீழத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழீழம் பெறமுடியாமல் போய்விடுமா என்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் 'தமிழீழத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. அது ஏற்கனவே இருக்கிறது. அதனைப் பாதுகாப்பதற்காகத் தான் நாங்கள் போராடுகின்றோம்

தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி - சி.வி.விக்கினேஸ்வரன் | C V Wigneswaran Interview

அதேபோன்று தமிழ்த்தேசம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. அதனைப் பாதுகாக்கும் மனோநிலையே தமிழ்த்தேசியம். அது அழிந்துவிடவில்லை. தேர்தலின் பின்னர் தமிழ்த்தேசத் தெருக்கள் பலவற்றில் இராணுவத்தடைகள் நீக்கப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.

ஒரே நாட்டுக்குள் தமிழ் பேசும் பிரதேசங்களில் மாத்திரம் ஏன் இந்தப் பாகுபாடு எனும் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழி பேசும் பிரதேசங்கள் என்ற உண்மையை உணர்ந்து செயலாற்றுபவர்களை தமிழ்த்தேசியத்தை அழிப்பவர்கள் என்று அடையாளம் காட்டமுடியாது.

அநுரவின் புதிய பயணம்: விடுதலை புலிகள் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்ட நாள்!

அநுரவின் புதிய பயணம்: விடுதலை புலிகள் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்ட நாள்!

தமிழ்த்தேசிய வைத்து வியாபாரம்

தமிழ்த்தேசிய சிந்தனையை வைத்து வியாபாரம் நடத்தியவர்கள் தேர்தலில் காணாமல்போயிருக்கிறார்கள். தமிழ்த்தேசிய சிந்தனையை ஏளனம் செய்து, கட்சிகளைப் பிரித்து சுயநல அரசியல் நடத்திய ஒருவர் காணாமல் போயிருக்கிறார்.

தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி - சி.வி.விக்கினேஸ்வரன் | C V Wigneswaran Interview

இருப்பினும் நடைபெற்று முடிந்த தேர்தலில் வட , கிழக்கில் அரசாங்கம் ஆசனங்களைப் பெற்றிருப்பதே உங்களது கேள்விக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்தத் தேர்தல் முடிவுகள் எமக்கு இறைவனால் தரப்பட்ட வரப்பிரசாதமாகும்.

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்தை ஆதரித்தவர்கள் இன்னமும் தமிழ்த்தேசியத்துடன் தான் இருக்கிறார்கள்.

இருப்பினும் பல சுயேட்சைக்குழுக்களின் தோற்றம் மற்றும் பல வருடகால அரசியல் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளுக்கு இடம்கொடுக்காமை போன்றவற்றால் அவர்கள் செய்வதறியாது பிரிந்துநின்று வாக்களித்திருக்கிறார்கள்.

அர்ச்சுனா எம்.பியின் சர்ச்சையை ஏற்படுத்திய செயல் - கேள்வி எழுப்பிய கபே அமைப்பு

அர்ச்சுனா எம்.பியின் சர்ச்சையை ஏற்படுத்திய செயல் - கேள்வி எழுப்பிய கபே அமைப்பு

மக்களின் ஆதரவு குறையவில்லை

அதேவேளை தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளின் மொத்தத்தொகையைப் பார்த்தால், தமிழ்த்தேசியத்துக்கான எமது மக்களின் ஆதரவு குறையவில்லை என்ற விடயமே புலனாகிறது.

தேர்தலில் தமிழ் தேசியத்தை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தோல்வி - சி.வி.விக்கினேஸ்வரன் | C V Wigneswaran Interview

ஆகவே தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை.

அதேவேளை ஐ.நா சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் உறுப்புரை ஒன்றின்கீழ் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்த்தேசம் என்பதை எந்தவொரு இலங்கை அரசாங்கமும் ஏற்காதவரை, வட, கிழக்கு தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                            


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024