7 அரச நிறுவனங்களின் பங்குகளை விற்க அமைச்சரவை அனுமதி
SriLankan Airlines
Sri Lanka Cabinet
LAUGFS Gas PLC
By Vanan
அரசாங்கத்திற்கு சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளை விற்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நிதி, உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அறிக்கை ஊடாக இதனை தெரிவித்துள்ளது.
- SriLankan Catering உள்ளிட்ட சிறிலங்கன் விமான சேவை நிறுவனம்
- Telecom
- சிறிலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம்
- Grand Hyatt Colombo
- ஹில்டன் ஹோட்டல் - கொழும்பு
- லிட்ரோ எரிவாயு நிறுவனம்
- Lanka Hospital கூட்டுத்தாபனம்
ஆகியவற்றின் அரச பங்குகளே விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு துரித வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, கட்டமைப்பு மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தும் செயன்முறையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி