கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதித்தனர் தபால் ஊழியர்கள்
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கனடா(canada) தபால் தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை (15) வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 55,000 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலை நிறுத்தம் பிஸியான விடுமுறை காலத்திற்கு முன்னதாக விநியோகங்களை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாட்கள் வேலை நிறுத்தம்
3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப அதிக ஊதியம் கோரி வருகின்றனர்.
ஊதிய உயர்வை வழங்க வேண்டும்
சேவைக்கு ஏற்ற ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளில் தபால் ஊழியர்களுக்கு 11.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனினும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது போதாது எனக் கூறப்படுகிறது. ஆனால் 22 சதவீத ஊதிய உயர்வு, ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, சிறந்த சுகாதார பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் ஆகியவற்றை தொழிற்சங்கம் கேட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்