கனடாவில் இருந்து யாழ் வந்தவர் சடலமாக மீட்பு
கனடாவில் (Canada) இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் இன்று (24) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பி.மரியதாசன் (வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவேளை இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இந்தநிலையில், இன்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான், அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
சாட்சிகளை யாழ்ப்பாணம் காவல்துழறயினர் நெறிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
