இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றம் : சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரப்போகும் கனடா
கனடாவில் கொன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அந்த கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.
கனடாவில் தமிழ் ஊடகமொன்றுக்கு அவர் அவர் அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு
“சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றில் ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தமிழினத்தை அழிப்பதற்கான திட்டமிடப்பட்ட சதி என்பதை ஐ.நா உட்பட சர்வதேச அரங்குகளில் முன்னிறுத்துவோம்.
அத்துடன், குறித்த வழக்கினை நடாத்துவதற்காக கனடாவின் வெளிவிவகார விடயங்களுக்கான வழக்கறிஞர்களை நாங்கள் வழிநடத்தவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        