எல்லைமீறிய கலவரத்தால் திணறும் கனடா
Canada
protest
truckers
By Vanan
கனடா - ஒட்டாவாவில் முன்னெடுக்கப்படும் சுதந்திரத்திற்கான வாகனத் தொடரணி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கனேடிய பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஒட்டாவா நகரம் முடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டகாரர்களின் நடத்தைகளால் கனேடிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவும் வெளிப்படையாக வெறுப்படைந்துள்ளனர் எனவும் கனேடியப் பிரதமர் கூறியுள்ளார்.
காழ்ப்புணர்ச்சி மற்றும் இன ரீதியான துஷ்பிரயோகம் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஆர்ப்பாட்டகாரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஜெஸ்ரின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
