கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Toronto
Canada
World
By Sathangani
எதிர்வரும் வார இறுதி நாட்களில் கனடாவின் (Canada) ரொறன்ரோவில் (Toronto) நிலவக்கூடிய காலநிலை குறித்து எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வார இறுதி நாட்களில் ரொறன்ரோவில் சுமார் 30 சென்டிமீற்றர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் விநியோகம்
ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மதிய வேளைகளில் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், கனடாவில் தொடரும் பனிப்புயல் காரணமாக கனடாவில் ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
5ம் ஆண்டு நினைவஞ்சலி