கஞ்சாவை பயிரிட கூறும் அமைச்சருக்கு தக்க பதிலடி
Parliament of Sri Lanka
Harsha de Silva
Diana Gamage
By Sumithiran
நாடாளுமன்ற வளாகத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

அமைச்சருக்கு பதிலடி
இலங்கையில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமானது அல்ல எனவும், கஞ்சா ஏற்றுமதி மூலம் பாரிய அளவிலான அந்நிய செலாவணியை ஈட்டமுடியும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்தார்.

கஞ்சா ஏற்றுமதி மூலம் டொலர்களை சம்பாதிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கஞ்சாவை விற்பனை செய்து அபிவிருத்தியடைந்த நாடுகள் உலகில் இல்லை எனவும் ஹர்ஷ டி சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி