அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Rice
By Dilakshan
5 பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தி அரிசியை அதிக விலைக்கு விற்க முயற்சிப்பதே சந்தையில் அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என முன்னாள் வேளாண்மை இயக்குனர் கே.பி.குணரத்ன கூறியுள்ளார்.
இந்த நிலைமையை தடுக்க அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சில்லரை சந்தையில் நாட்டு, வெள்ளை மற்றும் சிவப்பு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு விலை
இதில், அதிக தேவையுள்ள நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நுகர்வோர் கடும் அவதிக்குள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையில் அரிசி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி