இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்பட்ட சரிவு-விழ்ச்சி கண்ட வெளிநாட்டு பணியாளர்களின் வருமானம்
இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டு வருமானம் தொடர்பாக புதிய அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கை மூலம் (2022) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஒக்டோபர் மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களினால் அனுப்பிய தொகையானது வீழ்ச்சிநிலை கண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி,செப்டம்பர் மாதத்தில் 359 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை மத்திய வங்கிக்கு வருமானமாக கிடைத்திருந்த போதிலும் ஒக்டோபர் மாதத்தில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிய சரிவு
அதன்படி, 2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான பணப்பரிமாற்றங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 2929.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மதிப்பானது 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பணம் அனுப்பும் புள்ளிவிவரங்களை பார்க்கம்போது பாரிய சரிவாக கருதப்படுகின்றது.
அதற்கமைய கடந்த வருடத்தின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு வருமானமாக 4894.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுளதாகவும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
