பிரிட்டன் பிரதமர் மீது பாரிய குற்றச்சாட்டு
உக்ரைன் தொாடர்பான இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்திவிட்டாரென தெரிவித்து பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீது கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
போலந்து இராணுவத்தின் முன்னாள் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் ஜூனியர் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் Waldemar Skrzypczak இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பொறிஸ் ஜோன்ஸன் உக்ரைனிய பயிற்சி திட்டம் குறித்த விபரங்களை வெளியிட்டதன்மூலம், இராணுவ இரகசியத்தை வெளிப்படுத்திவிட்டார்.
பிரிட்டிஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து உக்ரைனிய வீரர்கள் போலந்தில் பயிற்சி பெறுவதை வெளிப்படுத்தியதன் மூலம், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளை பொறிஸ் ஜோன்சன் ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.
பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கருத்துக்கள் மோதலில் ஈடுபட்டுள்ள துருப்புக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என Waldemar Skrzypczak தெரிவித்துள்ளார்.
