யாழ். வரவுள்ள மிகப்பெரிய பயணிகள் சுற்றுலா கப்பல்
Jaffna
Sri Lanka Tourism
India
Tourism
Tourist Visa
By Thulsi
இந்தியாவில் இருந்து கோர்டெலியா குரூஸ் (Cordelia Cruises) அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது.
குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகள் இலங்கை வந்திருந்தது.
அத்துடன் 2024 ஆம் ஆண்டு 6 தடவைகள் இலங்கைக்கு வந்தது.
பாரிய சுற்றுலா பயணிகள் கப்பல்
அந்தவகையில் இந்த ஆண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.
காங்கேசன் துறைமுகத்தை வந்தடையும் கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் கோட்டை உள்ளிட்ட சில இடங்களை பார்வையிட்ட பின்னர் மீண்டும் இந்தியாவை சென்றடையவுள்ளனர்.
இந்த கப்பலானது மிகவும் பாரிய ஒரு சுற்றுலா பயணிகள் கப்பலாக காணப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி