பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாய் : வெளியான அதிர்ச்சித் தகவல்
Red Chilli
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Pakistan
By Sathangani
சிறிலங்காவிற்கு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு
இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாயை இறக்குமதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு 0112 112 718 எனும் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி