சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரிப்பு!
சீனாவில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம்
சீனாவின் வடமேற்கு பகுதியின் கன்சு மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள்
சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்களை முகாம்களில் தங்க வைக்க சீன அரசாங்கத்தால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை
இந்த நிலையில், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகளை அடிப்படையாக கொண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2014 ஆம் ஆண்டின் பின்னர் சீனாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கமாக இது கருதப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |