இலங்கை விவகாரத்தில் உறுதிபூண்ட சீனா..!
இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என சீன அதிபர் சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன அதிபர் சீ ஜிங்பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே சீ ஜிங்பிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனாவின் எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கைக்கு சீனா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என சீன அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
சீனாவுக்கான உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர் சீ சின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |