மீண்டும் உதவிக்கரம் நீட்டும் சீனா..! நாட்டை வந்தடைந்த சீன கப்பல்
சீனாவினால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் நவியோஸ் ஜாஸ்மின் (NAVIOS JASMINE) என்ற கப்பல் மூலம் நேற்றைய தினம் (25) குறித்த அரிசித்தொகை நாட்டை வந்தடைந்துள்ளது.
குறித்த அரிசித் தொகை இலங்கையின் ஆதரவற்ற பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் வாரம்

அதேபோல், எதிர்வரும் வாரம் மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
500 Metric Tonne of rice (50,000 packs) donated by #China to #SriLanka has reached Colombo Port today via Vessel NAVIOS JASMINE and will soon be distributed to the needy ?? students.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) October 25, 2022
Another 500 MT will arrive next week, bringing the ??Aid tally to 6,000 MT.
?Supplier: COFCO pic.twitter.com/I4ACDs4uT3