சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது - உறுதியளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்
Colombo
Sri Lanka
China
By pavan
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என வன உயிரிகள் திணைக்களத்தின் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குழு தாக்கல் செய்த ரிட் மனு நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது வன உயிரிகள் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்ட போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டது.
