மேலும் ஒன்பது நாடுகளுக்கு இலவச விசா: முக்கிய நாடொன்றின் அறிவிப்பு
29 நாடுகளுக்கு விசா இன்றிய அனுமதியை வழங்கியிருந்த சீனா (China) மேலும் ஒன்பது நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.
சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்நாடு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
நாடுகள்
சீனாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக முற்றாக முடங்கி கிடந்த சுற்றுலா துறை தற்போது புத்துயிர் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கே சீனா இந்த சலுகையை வழங்கியுள்ளது.
30 நாட்கள் தங்கும் வசதி
மேலும், எதிர்வரும் 30 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் இந்த சலுகையில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாட்கள் வரை அங்கு தங்கிக் கொள்ள முடியும்.
இதன் மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |