மீண்டும் இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா - உறுதியளித்த சீன அமைச்சர்
China
By pavan
இலங்கையில் பொருளாதார சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலிசப்ரியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் போது சீன வெளியுறவு அமைச்சர் கின் காங் இதனை கூறியுள்ளார்.
இலங்கைக்கு இயலுமான வகையில் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக சீன வெளியுறவு அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
சீன சுற்றுப்பயணம்
ஒத்துழைப்பு தொடர்பில் சீனா முன் மாதிரியாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அமைச்சர் அலி சப்ரியின் சீன சுற்றுப்பயணம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.
இதன்போது உலக அபிவிருத்தி மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் அலி சப்ரி கலந்துகொள்ளவுள்ளார்
